சூயெஸ் கால்வாயில் தரைதட்டி நின்ற சரக்குக் கப்பல் மீண்டும் முழுமையாக மிதக்கும் நிலைக்குக் கொண்டு வரப்பட்டுள்ளதாகக் கால்வாய் ஆணையம் தெரிவித்துள்ளது.
அதனைத் தொடர்ந்து, கப்பல் போக்குவரத்து மீண்டும் தொடங்கியுள்ளது.
கிட்டத்தட்ட ஒரு வாரமாக தரைதட்டி நின்ற அந்தக் கப்பல், இழுவைப் படகுகளால் வெற்றிகரமாக இழுக்கப்படுவதைக் காணொளிப் பதிவுகள் காட்டுகின்றன.
மீட்புக் குழுவினர் து, கப்பலை கால்வாயின் Great Bitter Lake எனும் நீர்ப்பகுதிக்கு இழுத்துச் சென்றனர்.
அங்கு, கப்பல் மீது சோதனை மேற்கொள்ளப்பட்டது.
சூயெஸ் கால்வாயின் அடைப்பால், பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
நாளொன்றுக்குக் கிட்டத்தட்ட 9 பில்லியன் டாலர் மதிப்புமிக்க வர்த்தகம் தடைபட்டுள்ளதாகக் கூறப்பட்டது.










