சுற்றுலாப் பயணியை தாக்கி தொலைபேசியை பறித்த வட்டவளை பகுதி இளைஞர்களுக்கு மறியல்

கொழும்பு கோட்டையிலிருந்து பதுளை நோக்கி சென்ற உடரட்ட மெனிக்கே ரயிலில் பயணித்த வெளிநாட்டு பெண்ணொருவரை தடியால் தாக்கி, அவரின் கையடக்க தொலைபேசியை பறிமுதல் செய்தனர் எனக் கூறப்படும் இரு சந்தேக நபர்கள் வட்டவளை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

விசாரணைகளின் பின்னர் இரு சந்தேக நபர்களும் ஹட்டன் நீதவான் நீதிமன்றத்தில் நேற்று முற்படுத்தப்பட்ட நிலையில் இருவரையும் எதிர்வரும் 18 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு அட்டன் நீதவான் நீதிமன்ற நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

வட்டவளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ரொசல்ல மற்றும் விக்டன் பகுதிகளைச் சேர்ந்த 23 மற்றும் 26 வயதுகளுடைய இருவரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

கொழும்பு கோட்டையில் இருந்து டிசம்பர் 04 ஆம் திகதி எல்ல நோக்கி பயணித்துக்கொண்டிருந்த 36 வயதான ஸ்பெயின் நாட்டு பெண் சுற்றுலாப் பயணி, ரயில் கதவு பகுதியில் இருந்தவாறு தனது தொலைபேசிமூலம் வீடியோ எடுத்துக்கொண்டு பயணித்துள்ளார்.

ரயில் வீதிக்கு அருகில் இருந்த இரு இளைஞர்கள் தனது கையை தடியால் தாக்கினர் எனவும், இதனையடுத்து 5 லட்சம் ரூபா பெறுமதியான தொலைபேசி கீழே விழுந்துள்ளது எனவும், தனது தலைபகுதியிலும் காயம் ஏற்பட்டுள்ளது எனவும் குறித்த பெண் எல்ல சுற்றுலா பொலிஸில் முறையிட்டுள்ளார்.

ஹட்டனுக்கும், வட்டவளைக்கும் இடைப்பட்ட பகுதியிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதனையடுத்து இது தொடர்பில் வட்டவளை பொலிஸாருக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளது.

இதனையடுத்து விசாரணை வேட்டையை முன்னெடுத்த பொலிஸார் அன்று இரவு சந்தேக நபர்கள் இருவரையும் கைது செய்தனர்.

வட்டவளை பொலிஸ் நிலையத்தக்கு நேற்று வந்த பாதிக்கப்பட்ட பெண் தனது கையடக்க தொலைபேசியை பெற்றுக்கொண்டுள்ளார். விரைவாக செயற்பட்டு உரிய நடவடிக்கை எடுத்த பொலிஸாருக்கும் நன்றி தெரிவித்தார்.

(க.கிஷாந்தன்)

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles