பதுளை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பதுளை அமுனுவெல்பிடிய – வட்டலுவ கொடபதன பகுதியில், மழையின் காரணமாக வீட்டின் சுவர் இடிந்து விழுந்தமையினால் வீடு பகுதியளவு சேதமடைந்துள்ளது. 
சுவர் இடிந்து விழுந்ததால் வீட்டின் கூரைகளும் கீழே விழுந்து சேதமடைந்துள்ளன.
அத்துடன் வீட்டில் இருந்த பொருட்களும் சேதமடைந்துள்ளதாக பதுளை பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த சம்பவம் இடம்பெறும் போது வீட்டில் 5 பிள்ளைகளும் தாய் மாத்திரமே இருந்துள்ளதாகவும் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை.
இவ்வனர்த்தம் நேற்று இரவு 8.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
ராமு தனராஜா
