சு.கவின் தலைமைப்பதவி மீண்டும் சந்திரிக்கா வசம்?

வீழ்ந்து கிடக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைக் கட்டியெழுப்புவதற்குச் சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க மீண்டும் கட்சியில் இணைய வேண்டும் என்று கட்சியின் முக்கியஸ்தர்கள் கருதுவதால் அதற்கான நகர்வில் அவர்கள் ஈடுபட்டுள்ளார்கள் என்று அறியமுடிகின்றது.

முதலில் சந்திரிகாவுக்கும் சு.கவின் தலைவர் மைத்திரிக்கும் இடையில் இருக்கின்ற மனக்கசப்பை நீக்க வேண்டும். அது நடந்தால்தான் சந்திரிக்காவை மீண்டும் கட்சியில் இணைப்பது சாத்தியம். இதனால் இதற்கான முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகின்றது என்று கட்சி வட்டாரம் தெரிவிக்கின்றது.

மைத்திரியை 2015 ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்தவுக்கு எதிராக இறக்கி மைத்திரியை ஜனாதிபதியாக்கியதில் பெரும் பங்கு சந்திரிக்காவுக்கு உண்டு. ஆனால், மக்கள் ஆணைக்கு மாறாக 2017 இல் மஹிந்தவை மைத்திரி பிரதமராக்கியதில் இருந்து சந்திரிக்காவுக்கு மைத்திரியுடன் மனக்கசப்பு ஏற்பட்டது.

2019 ஜனாதிபதித் தேர்தலில் கோட்டாபயவுக்கு ஆதரவு வழங்குவதற்குச் சுதந்திரக் கட்சி முடிவெடுத்ததால் அந்த மனக்கசப்பு மேலும் வலுவடைந்தது. மைத்திரியை வெளிப்படையாகவே விமர்சிக்கத் தொடங்கினார் சந்திரிகா.

இருந்தும், சுதந்திரக் கட்சி வீழ்ந்துவிட்டது. அதைக் கட்டியெழுப்புவதென்றால் சந்திரிகா கட்சியில் இருக்க வேண்டும் என்று கட்சியின் முக்கியஸ்தர்கள் இப்போது கருதுவதால் அவரை இணைப்பதற்கான நடவடிக்கையில் அவர்கள் இறங்கியுள்ளனர். எனினும், சந்திரிக்கா அம்மையார் இதற்கு சம்மதிப்பாரா என தெரியவில்லை.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles