சூடான் நாட்டில் சரக்கு விமானம் ஒன்று விபத்தில் சிக்கியதில் 2 விமானிகள் உள்பட 17 பேர் கொல்லப்பட்டனர்.
சூடான் நாட்டின் தலைநகர் ஜுபா அருகே அமைந்த விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டு சென்ற விமானம் ஒன்று திடீரென கீழே விழுந்து தீப்பிடித்து எரிந்தது.
இந்த விபத்தில் 2 விமானிகள், விமான பயணிகள் 15 பேர் என 17 பேர் கொல்லப்பட்டனர். மற்றொரு நபர் தீவிர காயங்களுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இதனை விமான நிலைய இயக்குனர் குர் குவோல் உறுதிப்படுத்தி உள்ளார். எனினும் பலியானோர் பற்றி எதுவும் கூறவில்லை.
அரசு சாரா அமைப்பு தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய சம்பள பணம், உணவு, வாகனங்கள் மற்றும் உதிரி பாகங்கள் ஆகியவற்றை சுமந்து கொண்டு விமானம் புறப்பட்டு சென்றுள்ளது. விமானம் விபத்தில் சிக்கி தீப்பிடித்து எரிந்த நிலையிலும், சுற்றியிருந்தவர்களில் சிலர் விமானத்தில் இருந்து பணம் எடுப்பதில் ஆர்வம் காட்டியுள்ளனர் என அவர் கூறியுள்ளார்.