நாட்டில் தற்போது அமுலில் உள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் எதிர்வரும் 14 ஆம் திகதிவரை நீடிக்கப்படுமா என்பது தொடர்பில் நாளைய தினமே தீர்மானம் எடுக்கப்படும் என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்தார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையில் வாராந்தம் வெள்ளிக்கிழமை கொவிட் – செயலணிக் கூட்டம் நடைபெறும். இதன்போது நாட்டு நிலைவரம் மீளாய்வு செய்யப்பட்டு முடிவுகள் எடுக்கப்படும்.
சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு உட்பட துறைசார் நிபுணர்கள் பலர் சந்திப்பில் பங்கேற்பார்கள்.
இதன்படி நாளை நடைபெறவுள்ள கூட்டத்தின்போதும் நிலைமை மீளாய்வு செய்யப்படும். அந்தவகையிலேயே ஊரடங்கு தொடருமா அல்லது 6 ஆம் திகதியுடன் தளர்த்தப்படுமா என்ற அறிவிப்பு விடுக்கப்படும்.