கியூபப் புரட்சியாளர் எர்னஸ்டோ சேகுவேராவை பிடித்த பொலிவிய ஜெனரல் கரி பிராடோ சல்மொன் 84 வயதில் மரணித்துள்ளார்.
அமெரிக்க இரகசிய சேவையின் ஆதரவுடன், 1967இல் சல்மொன் தலைமையிலான இராணுவ நடவடிக்கை ஒன்றிலேயே செகுவேராவின் ஏற்பாட்டில் நடந்த கம்யூனிச கிளர்ச்சி ஒன்று தோற்கடிக்கப்பட்டது.
அப்போது பொலிவியாவில் வலதுசாரி இராணுவ அரசு ஒன்றே ஆட்சியில் இருந்தது.
இந்நிலையில் ஆர்ஜன்டீனாவில் பிறந்த செகுவேரா கைது செய்யப்பட்ட மறு நாளே இராணுவ அதிகாரி ஒருவரால் கொலை செய்யப்பட்டார். இதில் செகுவேராவை கொன்றவர் என நம்பப்படும் பொலிவிய அதிகாரி மரியோ டெரான் கடந்த ஆண்டு மரணித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.










