மத்திய கீவுக்கு மேலால் கட்டுப்பாட்டை இழந்து பறந்த தனது சொந்த ஆளில்லா விமானத்தை உக்ரைனிய விமானப்படை சுட்டுவீழ்த்தியுள்ளது.
ஜனாதிபதி மாளிகைக்கு அருகில் கடந்த வியாழக்கிழமை மாலை இந்த ஆளில்லா விமானத்தை சுட்டுவீழ்த்த விமானப் படை முயன்றத்தில் அந்தப் பகுதியில் 15 தொடக்கம் 20 நிமிடங்கள் வரை வெடிப்புகள் பதிவாகியுள்ளன.
ஆரம்பத்தில் எதிரிகளின் ஆளில்லா விமானமே சுட்டுவீழ்த்தப்பட்டதாக உக்ரைன் ஜனாதிபதியின் தலைமை பணியாளர் அன்ட்ரி யர்மக் குறிப்பிட்டிருந்தார். எனினும் ஆபத்தான நிலைமை ஒன்றை தவிர்ப்பதற்காக சொந்த ஆளில்லா விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக விமானப் படை பின்னர் ஒப்புக்கொண்டது. இந்த ஆளில்லா விமானம் விழுந்ததில் எவருக்கும் அல்லது எந்த உடைமைக்கு பாதிப்பு ஏற்படவில்லை என்று குறிப்பிடப்பட்டது.
கிரம்ளின் மாளிகை மீது ஆளில்லா விமானத்தை அனுப்பி ஜனாதிபதி விளாடிமிர் புட்டினை கொல்ல உக்ரைன் முயற்சித்ததாக ரஷ்யா கடந்த புதன்கிழமை குற்றம்சாட்டிய நிலையிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.