ஜனநாயகன் குறித்து மகிழ்ச்சியான செய்தி!

தமிழக முதல்வர் விஜய்யின் பிறந்தநாளான ஜூன் 22-க்கு முன்பாக, ஜூன் 19 அல்லது 20-ஆம் திகதி ‘ஜனநாயகன்’ திரைப்படம் , திரையிடப்படக்கூடும் என தகவல் வெளியாகியுள்ளது.

அரசியலுக்கு வருவதற்கு முன்னர் விஜய் நடித்த, கடைசி படம் இதுவாகும்.

நடிகர் விஜய் நடித்துள்ள ஜனநாயகன் திரைப்படம் கடந்த ஜனவரி 9-ஆம் திகதி வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது.

எனினும், தணிக்கை (Censor) தொடர்பான சிக்கல்கள் மற்றும் சென்சார் சான்றிதழ் வழங்கப்படாததால் படத்தின் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டது.

இதையடுத்து, படத் தயாரிப்பு நிறுவனமான KVN Productions சென்சார் சான்றிதழ் கோரி, கடிதம் அனுப்பி இருந்தது.

சென்சார் போர்டு பரிந்துரைத்த மாற்றங்களைச் செய்ய படக்குழு ஒப்புக்கொண்டுள்ளதாகவும், படத்தின் சர்ச்சைக்குரிய சில காட்சிகள் நீக்கப்பட்டு நீளம் குறைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில் தற்போது நிலவி வந்த தடைகள் அனைத்தும் விலகி, நடிகர் விஜய்யின் பிறந்தநாளான ஜூன் 22-க்கு முன்பாக, ஜூன் 19 அல்லது ஜூன் 20-ஆம் திகதி ‘ஜனநாயகன்’ திரைப்படம் திரையரங்குகளில் ரிலீஸ் ஆக அதிக வாய்ப்புள்ளதாகப் புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன.

நீண்ட நாட்களாகத் தங்களின் ‘தளபதி’ படத்தின் அதிகாரப்பூர்வ ரிலீஸ் திகதிக்காக காத்துக்கொண்டிருந்த விஜய் ரசிகர்கள், இந்தத் தகவலால் மிகுந்த உற்சாகமடைந்து சமூக வலைத்தளங்களில் இதனைக் கொண்டாடி வருகின்றனர்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles