ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளியுறவுக் கொள்கைத் தலைவர் காஜா கல்லாஸ் (Kaja Kallas), ஈரானிய வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அராச்சி (Abbas Araghchi) உடன் இராஜதந்திர வாய்ப்புகள் மற்றும் கடல்சார் பாதுகாப்பு குறித்து விவாதித்ததுடன், சுதந்திரமான கப்பல் போக்குவரத்தை உறுதி செய்ய வேண்டியதன் அவசியத்தையும் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேற்படி சந்திப்பு குறித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், “ஹோர்முஸ் நீரிணை (Strait of Hormuz) மற்றும் பாப் அல்-மந்தப் நீரிணை (Bab al-Mandab Strait) ஆகிய இரண்டிலும் கப்பல் போக்குவரத்து எவ்வித தடையுமின்றி சுதந்திரமாக நடைபெற வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், “மரண தண்டனைகள் மற்றும் மரண தண்டனைத் தீர்ப்புகளின் கடுமையான அதிகரிப்பு உட்பட ஈரானுக்குள் நடக்கும் உள்நாட்டு ஒடுக்குமுறை குறித்தும்” தான் குரல் எழுப்பியதாகக் கல்லாஸ் தெரிவித்துள்ளார்.
