2021 ஜனவரி முதல் பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச நாளாந்த வேதனமாக ஆயிரம் ரூபா வழங்கப்படவேண்டும் என அரசாங்கம் அறிவித்திருந்தாலும் அந்த உறுதிமொழி இன்னும் நிறைவேற்றப்படவில்லை. கூட்டு ஒப்பந்த பேச்சு இழுபறி மட்டத்திலேயே இருக்கின்றது.
பெருந்தோட்டக் கம்பனிகளுக்கும், முதலாளிமார் சம்மேளனத்துக்குமிடையில் தொழில் அமைச்சரின் தலைமையில் இதுவரை 6 சுற்று பேச்சுகள் நடைபெற்றிருந்தாலும் அவை தோல்வியிலேயே முடிவடைந்துள்ளன.
அடிப்படை நாட் சம்பளமாக ஆயிரம் ரூபா வேண்டும் என்பதே தொழிலாளர்களின் கோரிக்கையாகும். எனினும், அனைத்து கொடுப்பனவுகளையும் உள்ளடக்கிய வகையில் சூழ்ச்சிகரமான சம்பள சூத்திரத்தை கம்பனிகள் முன்வைத்துள்ளன. இதனை தொழிற்சங்கங்கள் ஏற்கவில்லை. அத்துடன், அடிப்படை சம்பளம் ஆயிரம் என்ற கோரிக்கையையும் கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் பிரதான தொழிற்சங்கம் கைவிட்டுள்ளது.
ஜனவரி மாதம் முடிவடைவதற்குள் தீர்வு காணப்படக்கூடிய சாத்தியம் இல்லை. எனவே, சம்பளப் பிரச்சினை பெப்ரவரி மாதத்துக்குள்ளும் நுழைகின்றது.
கம்பளை நிருபர் – லாவண்யா