ஜனவரி முதல் தடுப்பூசி அட்டை கட்டாயம்

நாடளாவிய ரீதியில் எதிர்வரும் ஜனவரி மாதம் 1ஆம் திகதி முதல் கொவிட் தடுப்பூசி அட்டை பயன்பாடு கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான மேலதிக நடவடிக்கைகளை சுகாதார அமைச்சு மேற்கொண்டு வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கம்பஹா மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற கொவிட் குழுக் கூட்டத்தில் அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

Related Articles

Latest Articles