ஜனாதிபதிக்கு முழு ஆதரவு – மொட்டு கட்சி சத்தியம்!

” சர்வதேச நாணய நிதியத்துடன் ஏற்படுத்திக்கொள்ளப்பட்ட இணக்கப்பாடு தொடர்பான விடயங்கள் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படும்.” – என்று நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித்த அபேகுணவர்தன தெரிவித்தார்.

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையகத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார்.

” எமது அரசாங்கம் வெளிப்படை தன்மையுடன்தான் செயற்படுகின்றது ஒளிவு மறைவுக்கு இடமில்லை. ஜனாதிபதியுடன் எமக்கு புரிந்துணர்வு உள்ளது. நிலையானதொரு அரசாங்கத்தை ஸ்தாபிக்க அவருக்கு முழு ஆதரவும் வழங்கப்படும். ” – எனவும் அவர் குறிப்பிட்டார்.

Related Articles

Latest Articles