ஜனாதிபதியின் இந்திய பயணம்: வெளிவிவகார அமைச்சு இன்று விசேட அறிவிப்பு

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் இந்திய பயணம், எட்கா உடன்படிக்கை உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் இன்று (20) விசேட அறிவிப்பை வெளியிடவுள்ளார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் மாநாடு அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்றது.

இதன்போது ஜனாதிபதியின் இந்திய விஜயம் தொடர்பில் அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸவிடம் கேள்விகள் எழுப்பட்டன. இவற்றுக்கு அமைச்சர் நேரடி பதில் வழங்கவில்லை.

“ எட்கா உடன்படிக்கை, இணைப்பு, எண்ணெய் குதங்கள் உட்பட இந்திய விஜயத்தில் கலந்துரையாடப்பட்ட விடயங்கள் உள்ளிட்ட அனைத்து விடயங்கள் சம்பந்தமாகவும் வெளிவிவகார அமைச்சர் நாளை (இன்று) ஊடக சந்திப்பொன்றை நடத்தவுள்ளார்.” என்று அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ குறிப்பிட்டார்.

Related Articles

Latest Articles