ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும், ஐக்கிய மக்கள் சக்தியின் தவிசாளர் சரத் பொன்சேகாவுக்கும் இடையில் நாடாளுமன்ற வளாகத்தில் நேற்று சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள ஜனாதிபதி அலுவலகத்தில் சுமார் 20 நிமிடங்கள்வரை நடைபெற்ற இச்சந்திப்பின்போது சமகால விவகாரங்கள் பற்றி பேசப்பட்டுள்ளன என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஜனாதிபதியின் கொள்கை விளக்க உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஐக்கிய மக்கள் சக்தியினர் சபையில் இருந்து நேற்று வெளிநடப்பு செய்தனர். எனினும், பொன்சேகா சபையில் இருந்து ஜனாதிபதியின் உரையை செவிமடுத்தார்.
அத்துடன், பொன்சேகாவுக்கும், சஜித்துக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
எனினும், ஐக்கிய மக்கள் சக்தியை விட்டு விலகபோவதில்லை என பொன்சேகா அறிவித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
படம் – கோப்பு படம்