ஜனாதிபதி ஆணைக்குழுவின் பதவி காலம் நீடிப்பு

கடந்த மார்ச் மாதம் 31ஆம் திகதி முதல் மே மாதம் 15ஆம் திகதி வரையான காலப்பகுதியில் நாட்டின் பல பகுதிகளில் இடம்பெற்ற சொத்துக்களுக்கு தீ வைப்பு மற்றும் கலவரங்கள் தொடர்பில் ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிப்பதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் பதவிக்காலம் நீடிக்கப்பட்டுள்ளது.

அதன் பதவிக்காலம் எதிர்வரும் நவம்பர் 30ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

குறித்த ஆணைக்குழுவின் உத்தியோகபூர்வ பதவிக்காலம் எதிர்வரும் 31ஆம் திகதியுடன் முடிவடையவிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Latest Articles