ஜனாதிபதி செயலாளர் பதவியில் மாற்றம் வருமா?
ஜனாதிபதி செயலாளர் பதவியில் மாற்றம் மேற்கொள்வதற்கு தீர்மானிக்கப்படவில்லை என்று அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்றது.
இதன்போது ஜனாதிபதி செயலாளர் பதவி விலகவுள்ளார் என வெளியாகும் தகவல் தொடர்பில் கேள்வி எழுப்பட்டது.
இதற்கு பதிலளித்த அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ,
“ அவ்வாறு எந்தவொரு திட்டமும் அரசிடம் இல்லை. சிலர் திட்டமிட்ட அடிப்படையில் செய்திகளை உருவாக்கி வருகின்றனர்.
அரசியலில் வங்குரோத்து அடைந்தவர்களும், சட்ட நடவடிக்கையை எதிர்கொண்டுள்ளவர்களுமே தமது இருப்புக்காக இப்படியான தகவல்களை பரப்பிவருகின்றனர்.” என்று குறிப்பிட்டார்.
அதேவேளை, எதிரணி உறுப்பினர்களை தம்முடன் இணைக்க ஆளுங்கட்சி முற்படுவதாக வெளியாகும் தகவலிலும் உண்மை இல்லை எனவுமு; அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.










