இலங்கையில் ஜனாதிபதி தேர்தல் நடைபெறுவதற்கு முன்னர் இந்திய பிரதமர் நரேந்திய மோடி இலங்கைக்கு வருகை தருவார் என்பது உறுதியாகியுள்ளது என்று அரச தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்திய வெளிவிவகார அமைச்சர் எதிர்வரும் 20 ஆம் திகதி இலங்கை வரும்போது, பிரதமரின் பயண நிகழ்ச்சி நிரல் பற்றியும் பேசப்படவுள்ளது என அறியமுடிகின்றது.
கடந்த முறை பிரதமர் மோடி இலங்கை வந்தபோது வடக்கு மற்றும் மலையக பகுதிகளுக்கு சென்றிருந்தார். எனினும், இம்முறையும் அப்பகுதிகளுக்கு பயணம் மேற்கொள்வாரா என்பது பற்றி இன்னும் தெரியவரவில்லை.
