ஜனாதிபதி தேர்தல் ஒத்திவைக்கப்படுமா?

” உள்ளூராட்சி சபைத் தேர்தல் போல் எமது நாட்டில் ஜனாதிபதித் தேர்தலோ, நாடாளுமன்றத் தேர்தலோ இனிவரும் காலங்களில் நடைபெறாதா?”– இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் கேள்வி எழுப்பினார்.

நாடாளுமன்றத்தில் இன்று ஜனாதிபதியிடமான கேள்வி நேரத்தின் போதே அவர் இவ்வாறு கேள்வி எழுப்பினார்.இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர்,

“உங்களுக்கு பெரிய மூளை உள்ளது என்று எனக்குத் தெரியும். ஆனால், நாட்டின் பொருளாதாரத்தை சர்வதேச நாணய நிதியத்தின் உதவியுடன் கட்டியெழுப்ப வேண்டும் என்பதற்காகச் சாக்குப்போக்குச் சொல்லி பிற்போடப்படும் உள்ளூராட்சி சபைத் தேர்தல் போல் எமது நாட்டில் ஜனாதிபதித் தேர்தலோ, நாடாளுமன்றத் தேர்தலோ இனிவரும் காலங்களில் நடைபெறாதா?

ஜனநாயக உரிமைகள் மறுக்கப்படுமா? இதற்கான கால அவகாசம் என்ன?” – என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

Related Articles

Latest Articles