ஜனாதிபதி தேர்தல்: குவியும் வேட்பாளர்கள்!

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சைக்குழுக்களில் இருந்து 10 இற்கு மேற்பட்ட ஜனாதிபதி வேட்பாளர்கள் போட்டியிடுவார்கள் என தெரியவருகின்றது.

ஜனாதிபதி தேர்தலில் களமிறங்குவதை தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க, ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச, ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் உறுதிப்படுத்தியுள்ளனர்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி வேட்பாளரை களமிறக்காவிட்டாலும், அக்கட்சி வேட்பாளர் ஒருவரை முன்நிறுத்தவுள்ளது.

அத்துடன், தொழில் முயற்சியாளரான மொபிம கட்சியின் தலைவர் திலித் ஜயவீர, பொதுமக்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ஜனக ரத்னாயக்க,  முன்னாள் அமைச்சர் விஜயதாச ராஜபக்ச, முன்னாள் அமைச்சர் ரொஷான் ரணசிங்க, ஜே.ஆர். ஜயவர்தனவின் பேரன், சம்பிக்க ரணவக்க உள்ளிட்டவர்களும் ஜனாதிபதி தேர்தல் சமரில் இறங்க திட்டமிட்டுள்ளனர்.

Related Articles

Latest Articles