நாட்டின் தற்போதைய ஜனாதிபதி மற்றும் பிரதமரரை உடனடியாக பதவியில் இருந்து நீக்கி இடைக்கால அரசாங்கத்தினை அமைக்குமாறு விசேட வைத்திய நிபுணர்கள் சங்கம் அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது.
விசேட வைத்திய நிபுணர்கள் சங்கத்தின் உறுப்பினர்களின் வேண்டுகோளுக்கு இணங்க இந்தத் தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக சங்கத்தின் தலைவர் லக்குமார பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
வருடாந்த பொதுக் கூட்டத்தின் போதே இந்தத் தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.