” ஜனாதிபதி – மொட்டு கட்சி உறவில் விரிசல் இல்லை”

” ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கும், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையிலான உறவில் எவ்வித விரிசலும் ஏற்படவில்லை.” – என்று மொட்டு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் காமினி லொக்குகே இன்று தெரிவித்தார்.

மொட்டு கட்சி தலைமையகத்தில் இன்று நடைபெற்ற சந்திப்பொன்றின் பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

அத்துடன், அமைச்சு பதவி வழங்கப்படாமை தொடர்பில் தான் அதிருப்தியில் இல்லை எனவும் காமினி லொக்குகே கூறினார்.

Related Articles

Latest Articles