ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு 2025 இல் ஐக்கிய நாடுகள் சபையில் உயர்பதவியொன்று கிடைக்கப்பெறவுள்ளது. இதற்கு இந்தியாவும் இணக்கம் தெரிவித்துள்ளது என்று ரஷ்யாவுக்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்க தெரிவித்தார்.
இணைய ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலின்போதே அவர் இந்த தகவலை வெளியிட்டார்.
“ ரணிலுக்கு சர்வதேசத்தில் நல்லபெயர் வந்துள்ளது. ஜனாதிபதி வேட்பாளர் பெயர் பட்டியலில் அவரின் பெயர் இருந்தாலும், இல்லாவிட்டாலும் 2025 இல் ஐ.நாவில் ரணிலின் பெயர் இருக்கும். அந்த பதவிமூலம் எமது நாட்டுக்கும் கௌரவம் கிட்டும்.
ஐ.நா. பொதுச்செயலாளர் பதவி அல்ல. அதற்கு அடுந்ந நிலையில் உள்ள பதவி. பிறகு ஐ.நா. பொதுச்செயலாளர் பதவிக்கும் போட்டியிடலாம். இந்தியாவும் இணக்கம் தெரிவித்துள்ளது.” – என்றார்.
எனினும், ஜனாதிபதி தரப்பில் இருந்து இது தொடர்பில் எவ்வித தகவலும் இன்னும் வெளியாகவில்லை.