ஜனாதிபதி ரணில் 17 ஆம் திகதி ஐரோப்பா விஜயம் – பரிஸ் கிளப் உறுப்பினர்களை சந்திக்கவும் திட்டம்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எதிர்வரும் 17ஆம் திகதி பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளுக்கு உத்தியோகபூர்வ பயணமொன்றை மேற்கொள்ளவுள்ளார்.

தனது பிரான்ஸ் பயணத்தின்போது பரிஸ் கிளப் உறுப்பினர்களையும் ஜனாதிபதி சந்திக்கவுள்ளார்.

இலங்கையின் கடன் நெருக்கடி தீர்வு மற்றும் கடன் ஸ்திரத்தன்மைக்கு ஆதரவளிப்பதாக பரிஸ் கிளப் முன்னர் அறிவித்திருந்தது.

இந்த விஜயத்தின் போது இலங்கையின் எதிர்கால கடன் மறுசீரமைப்பு பணிகள் குறித்தும் ஜனாதிபதி கலந்துரையாடவுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஜனாதிபதி தனது ஐரோப்பிய சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு ஜூன் 26 ஆம் திகதி நாடு திரும்பவுள்ளார்.

Related Articles

Latest Articles