இலங்கை உள்ளிட்ட கறுப்பு பட்டியலிலுள்ள 6 நாடுகளின் பயணிகளுக்கு இன்று (20) முதல் நாட்டிற்குள் நுழைவதற்கு ஜப்பான் அனுமதி வழங்கியுள்ளது.
கொவிட் தொற்று கடுமையாக உள்ள நாடுகளை கறுப்புப் பட்டியலில் சேர்த்திருந்த ஜப்பான், அந்தப் பட்டியலை மறுசீரமைத்து வருகிறது.
இதற்கமைய இலங்கையில் 50 வீதத்திற்கும் அதிகமானோர் இரண்டு தடுப்பூசிகளையும் பெற்றுள்ளதால் இலங்கையை கறுப்புப் பட்டியலில் இருந்து ஜப்பான் நீக்கியுள்ளது.
அத்துடன், தற்போதுள்ள முடக்கம், கொவிட் தொற்றின் வீழ்ச்சி ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், ஜப்பான் செல்லும் இலங்கையர் இரண்டு தடுப்பூசிகளைப் பெற்றிருக்க வேண்டும் என்பதுடன் ஜப்பானின் கொவிட் கட்டுப்பாட்டு விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டியது அவசியமானது என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.