சீன மக்கள் குடியரசின் முன்னாள் ஜனாதிபதி ஜியாங் ஜெமினின் மறைவுக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இரங்கல் தெரிவித்துள்ளார்.
சீனாவின் முன்னாள் ஜனாதிபதியின் மறைவுக்கு இரங்கல் தெரிவிப்பதற்காக வெள்ளிக்கிழமை (02) பிற்பகல் கொழும்பில் உள்ள சீனத் தூதரகத்திற்குச் சென்ற ஜனாதிபதி, சீனத் தூதரகத்தில் வைக்கப்பட்டிருந்த அனுதாபப் புத்தகத்தில் கையொப்பமிட்டார்.
மறைந்த திரு ஜியாங் ஜெமின் அவர்கள் சீன மக்கள் குடியரசிற்கு சிறந்த சேவையை ஆற்றிய ஒரு சிறந்த தலைவர் என்று ஜனாதிபதி விக்கிரமசிங்க தெரிவித்தார்.










