ஜி.எஸ்.டி 2.0 : இந்தியாவின் துணிச்சலாக வரி சீர்த்திருத்தம்

ஜி.எஸ்.டி 2.0 : இந்தியாவின் துணிச்சலாக வரி சீர்த்திருத்தம்

இந்தியாவின் சரக்கு மற்றும் சேவையை வரியான ஜி.எஸ்.டி வரியை எளிமைப்படுத்தி, சாதாரண மக்களுக்கான சுமையை குறைத்து, பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும் திட்டம் தொடர்பில் பிரதமர் நரேந்திர மோதி கவனம் செலுத்தியுள்ளார்.

நாட்டின் முன்னேற்றம் மற்றும் பொருளாதார உறுதித்தன்மையை மேம்படுத்தும் நோக்கிலேயே இந்த மேம்படுத்தப்பட்ட ஜி.எஸ்.டி வரி திட்டம் கொண்டுவரப்படுகின்றது.

ஜி.எஸ்.டி 2.0 என அடையாளத்துடன் இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்படுகின்றது.

இந்தியாவின் தற்போது காணப்படுகின்ற 0, 5, 12, 18, 28 ஆகிய வீதத்திலான வரி முறைகளை ரத்து செய்து, அவற்றை இரண்டு முறைகளின் கீழ் அமுல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இதன்படி, இந்தியாவில் இனி 5 மற்றும் 18 வீத வரி மாத்திரமே காணப்படும் என இந்திய ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

எனினும், ஆடம்பர மற்றும் தீங்கு விளைவிக்கும் பொருட்களுக்கு அதிகூடிய வரி வீதத்தை அறவிட எதிர்பார்க்கப்படுகின்றது. இதன்படி, குறித்த பொருட்களுக்கு 40 வீத வரி முறையொன்று அறிமுகப்படுத்தப்படுகின்றது.

சவற்காரம், பற்பசை, சைக்கிள், பால், பன்னீர், ரொட்டி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களுக்கு ஜி.எஸ்.டி முழுமையாக ரத்து செய்வதற்கோ அல்லது 5 வீதத்திற்கும் குறைவான வட்டியை அமுல்டுத்துவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது.

கிராமபுற கைவினை தயாரிப்பாளர்களுக்கு பெருமளவிலான நன்மையை வழங்கும் நோக்கில், கைவினைப் பொருட்களுக்காக 5 வீத வரியை அறவிட இந்திய அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

மேலும், மருத்துவ ரீதியில் பயன்பெரும் வகையில் வரி முறைகளை நீக்க அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன்படி, 33 வகையாக உயிர் காக்கும் மருந்து பொருட்களுக்கு விதிக்கப்பட்டு வந்த ஜி.எஸ்.டி வரி முறை ரத்து செய்யப்படுகின்றது. மேலும், பல மருத்து வகைகளுக்கும், மருத்துவ உபகரணங்களுக்கும் 5 வீத வரி மாத்திரமே அறவிடப்படவுள்ளது. ஆயுள் காப்புறுதி, சுகாதார காப்புறுதி என முக்கிய காப்புறுதி திட்டங்களுக்கு வரி முறை ரத்து செய்யப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது என இந்திய ஊடகத் தகவல்கள் குறிப்பிடுகின்றன.

விவசாயத்தை ஊக்குவிக்கும் நோக்குடன் இதுவரை விவசாய பொருட்களுக்கு காணப்பட்ட 18 வீத வரி, 5 வீதம் வரை குறைக்கப்பட்டுள்ளது.

உளவு இயந்திரங்கள், விவசா இயந்திரங்கள், உர உற்பத்திக்காக பயன்படுத்தப்படும் இரசாயண பொருட்கள் ஆகியவற்றிற்கு இந்த வரி முறை அமுல்படுத்தப்படுகின்றது.

புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உபகரணங்களுக்கு 5 வீத வரி குறைப்பு மேற்கொள்ளப்படுகின்றது.

சிறிய ரக கார்கள், 350 சிசிக்கும் குறைவான இயந்திர வலுவைக் கொண்ட மோட்டார் சைக்கிள்கள், தொலைக்காட்சி, குளிரூட்டி உள்ளிட்ட சாதாரண மக்கள் பயன்படுத்தும் பொருட்களுக்கு இமுவரை 28 வீதமாக காணப்பட்ட வரியானது, 18 வீதம் வரை குறைக்கப்படுகின்றது. சீமெந்து மீதான வரியானது 18 வீதம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சுற்றுலாத்துறையின் மேம்பாட்டிற்காகவும் வரி சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகத் தகவல்கள் குறிப்பிடுகின்றன.

நடுத்தர வருமானத்தை கொண்ட மக்களுக்கு நன்மையை அளிக்கும் நோக்கில் இந்த திட்டம் அமுலுக்கு கொண்டு வரப்படுவதாக இந்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

அத்துடன், ஆடம்பரப் பொருட்களுக்கு விதிக்கப்படுகின்ற உயர் வரி முறையின் கீழ் சுகாதாரம் மற்றும் சூழலை பாதுகாக்கும் நோக்கம் காணப்படுவதாகவும் அவர் கூறுகின்றார்.

சிறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கு இலகு விதிமுறைகள், குறைந்த பூர்த்தி மற்றும் செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான தானியங்கி கண்காணிப்பு ஆகியன அறிமுகப்படுத்தப்படுகின்றன.

வரி விவகாரம் தொடர்பான நீதிமன்ற முறையொன்றும் செப்டம்பர் மாதத்திற்குள் நடைமுறைப்படுத்துவதற்கு தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.

இந்த மாற்றங்கள் அத்தியாவசிய பொருட்களின் விலையை குறைத்து, பணவீக்கத்தை 0.5 வீதம் முதல் ஒரு வீதம் வரை தணிக்க முடியும் என பொருளாதார நிபுணர்கள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.

அத்துடன், வாகனங்கள் மற்றும் மின் சாதன பொருட்களின் தேவை அதிகரிக்கும் சாத்தியம் எழுந்துள்ளதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

அடுத்த தலைமுறைக்கான இலகு ஜி.எஸ்.டி சீர்த்திருத்தம், ஜி.எஸ்.டியின் முன்னைய வெற்றியை கொண்டு, எளிமையான 2 அடுக்கு வரி முறைகள், சமமான வரி விதிப்பு மற்றும் விரிவான பணத்தீர்வுகளுக்கு இந்த வரி முறை வழிவகுக்கும் என கூறப்படுகின்றது.

அத்துடன், இந்தியாவின் மாநிலங்களுக்கான வரி வருமானத்தை வலுப்படுத்த இந்த 2.0 வழி முறை வழி வகுக்கும் என பொருளாதார நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

மாநில வருமானம் அதிகரிப்பு, இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கு பாரிய ஊக்குவிப்பாக அமையும் எனவும் இந்திய பொருளாதார நிபுணர்களை மேற்கோள்காட்டி இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த வரி முறையானது இன்று முதல் அமுலுக்கு கொண்டு வரப்படுகின்றது.

இதன்படி, இந்தியாவின் எளிமையானதும், சமமானதும் மற்றும் வளர்ச்சி நோக்கமுடையமான ஜிஎஸ்டி கட்டமைப்பை உருவாக்கும் உறுதியை மீண்டும் வலியுறுத்துகின்றன. இது பொதுமக்களுக்கு எளிதான வாழ்க்கையையும், நிறுவனங்களுக்கு எளிதான வணிக சூழலையும் உறுதி செய்கின்றது என இந்திய அரசாங்கத்தின் தகவல்கள் குறிப்பிடுகின்றன.

Related Articles

Latest Articles