இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் மகளிர் தின நிகழ்வு எதிர்வரும் 27ஆம் திகதி கொட்டக்கலை சி.எல்.எப் வளாகத்தில், காங்கிரஸின் பொதுச் செயலாளரும் இராஜாங்க அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தலைமையில் நடைபெறவுள்ளது.
சர்வதேச மகளிர் தினம் கடந்த 8ஆம் திகதி உலகளாவிய ரீதியில் கொண்டாடப்பட்டது.
இதனையொட்டி இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் மகளிர் தின நிகழ்வை, இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் தலைமையில் பாரம்பரிய கலை, கலாச்சார நிகழ்வுகளுடனும் போட்டிகளுடனும் கூடிய சிறப்பு அம்சங்கள் கொண்ட நிகழ்வாக இடம்பெறவுள்ளது என இ.தொ.காவின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
அதேவேளை, இ.தொ.காவின் ஊடகப்பிரிவு முன்னதாக வெளியிட்டிருந்த அறிக்கையில் மகளிர் தின நிகழ்வு நாளை நடைபெறவுள்ளது எனவும், அந்நிகழ்வுக்கு இ.தொ.காவின் நிர்வாகச் செயலாளர் விஜயலக்மி தொண்டமான் தலைமையேற்பார் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது.