” ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உள்ளடங்கலான அரசும் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி எதிர்வரும் 9 ஆம் திகதி நடைபெறும் போராட்டத்துக்கு முழு ஒத்துழைப்பு வழங்கப்படும்.”
இவ்வாறு ஜே.வி.பியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.
காலி முகத்திடல் போராட்டக்காரர்கள், ஜே.வி.பியின் தலைவர் அநுர குமார திஸாநாயக்கவை இன்று சந்தித்து பேச்சு நடத்தினர்.
ஜே.வி.பி. தலைமையகத்தில் இதற்கான சந்திப்பு நடைபெற்றது. அதன்பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிடுகையிலேயே அநுர குமார திஸாநாயக்க இவ்வாறு அறிவிப்பு விடுத்தார்.
” காலி முகத்திடல் போராட்டக்காரர்கள் 9 ஆம் திகதியை தேசிய எதிர்ப்பு தினமாக பிரகடனப்படுத்தியுள்ளனர். கோட்டா, ரணில் அரசை விரட்டுவதே இதன் நோக்கம். அதற்கு கூட்டு ஆதரவை கோரினர். நாம் ஆதரவை வழங்க தயார்.” எனவும் அநுரகுமார திஸாநாயக்க குறிப்பிட்டார்.