‘ஜெட்’ வேகத்தில் விலை உயர்வு – 1000 ரூபாவையும் காணோம்’! தலவாக்கலையில் போராட்டம்!!

பொருட்களின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளமைக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ் முற்போக்கு கூட்டணியால் நாளை (16) போராட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளது.

தலவாக்கலை நகரில் முற்பகல் 10 மணியளவில் குறித்த போராட்டம் ஆரம்பமாகும். தமிழ் முற்போக்கு கூட்டணியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசியல் செயற்பாட்டாளர்கள் இதில் பங்கேற்கவுள்ளனர்.

அத்தியாவசியப் பொருட்களின் விலையை உடன் குறைக்குமாறும், வரவு – செலவுத் திட்டம் ஊடாக மக்களுக்கு நிவாரணங்களை வழங்குமாறும் இதன்போது வலியுறுத்தப்படவுள்ளது.

அத்துடன், பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நாட் சம்பளமாக ஆயிரம் ரூபா வழங்கப்படவில்லை. தொழில் சுமையும் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனை கண்டித்தும், ஆயிரம் ரூபாவை வழங்குமாறும் இதன்போது வலியுறுத்தப்படவுள்ளது.

Related Articles

Latest Articles