ஜே.ஆர். யுகத்துக்கு முடிவு கட்டுகிறார் கோட்டா! புதிய அரசமைப்புக்கான பணிகள் நிறைவு!!

” புதிய அரசியலமைப்பை இயற்றும் பணி நிறைவுக்குவந்துள்ளது. இறுதி வரைபை தயாரிப்பதற்காக உத்தேச வரைபு நகல் சட்டவரைஞர் திணைக்களத்துக்கு தற்போது அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. வரவு – செலவுத் திட்டம் கூட்டத்தொடர் முடிந்ததும், புதிய அரசியலமைப்பு குறித்து நாடாளுமன்றத்தின் அவதானம் திரும்பும்.” – என்று வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்தார்.

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” ஜே.ஆர். யுகத்தில் (1978) உருவாக்கப்பட்ட அரசியலமைப்பே நாட்டில் தற்போதும் அமுலில் உள்ளது. 43 ஆண்டுகள் கடந்துவிட்டன. இக்காலப்பகுதியில் சமூகத்தில் பல மாற்றங்கள் – முன்னேற்றங்கள் நிகழ்ந்துள்ளன. சமூகத்தின் மாற்றத்துக்கேற்ப அரசியலமைப்பிலும் மாற்றங்கள் இடம்பெறவேண்டும். நாட்டின் உயரிய சட்டமான அரசியலமைப்பு என்பது கல்லால் செதுக்கப்பட்டதாக இருக்ககூடாது. நெகிழ்வுத்தன்மை அவசியம்.

அந்தவகையில் புதிய அரசியலமைப்பு இயற்றப்படும் என்ற உறுதிமொழியை ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச வழங்கினார். அந்த பணியை முன்னெடுப்பதற்காக ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஷ் த சில்வா தலைமையில் நிபுணர்கள் குழுவொன்று அமைக்கப்பட்டது. அக்குழுவானது தமது பணியை நிறைவுசெய்துள்ளது. உத்தேச அரசியலமைப்பு தயாரிக்கப்பட்டுள்ளது. இறுதி வரைபை தயாரிப்பதற்காக அது சட்டவரைஞர் திணைக்களத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

2022 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் நவம்பர் 22 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படும். டிசம்பர் 10ஆம் திகதி இறுதி வாக்கெடுப்பு நடத்தப்படும். எனவே, 2022 ஆம் ஆண்டில் புதிய அரசியலமைப்பு தொடர்பில் அவதானம் செலுத்தும் வாய்ப்பு நாடாளுமன்றத்துக்கு கிடைக்கும்.” -என்றார்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles