அயர்லாந்து தந்த அதிர்ச்சி வைத்தியம்: இங்கிலாந்தை வீழ்த்தி மீண்டெழுமா இந்தியா?

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான முதலாவது T-20 கிரிக்கெட் போட்டி இன்று(01) நடைபெறவுள்ளது.

ரிவர்​சைடு Riverside Stadium மைதானத்​தில் இந்திய நேரப்படி இன்று இரவு 10 மணிக்கு போட்டி ஆரம்பமாகும்.

ஸ்​ரேயஸ் ஐயர் தலை​மையி​லான இந்திய T20 கிரிக்​கெட் அணி கடந்த வாரம் அயர்​லாந்​தில் அந்த அணிக்கு எதி​ராக நடை​பெற்ற இருதரப்பு T 20 தொடரை இந்திய அணி 2-0 என இழந்​திருந்​தது.

அயர்​லாந்து சுற்​றுப்​பயணம் முடிவடைந்த நிலை​யில் 5T 20 போட்​டிகள் கொண்ட தொடரில் விளையாடுவதற்​காக இந்திய அணி, இங்கிலாந்து சென்றுள்​ளது.

அயர்​லாந்து ஆடு​களத்​தில் இந்​திய அணி வீரர்​கள் துடுப்பெடுத்தாட சிரமப்​பட்​டனர். 15 வயதாகும் அதிரடி வீர​ரான வைபவ் சூர்​ய​வன்​ஷிக்கு அயர்​லாந்து தொடரில் வாய்ப்பு வழங்​கப்​பட​வில்​லை.

இது விவாதப் பொருளாக மாறி​யிருந்​தது. எனினும் இங்​கிலாந்து தொடரிலும் சூர்​ய​வன்​ஷிக்கு வாய்ப்பு வழங்​கப்​படுவது சந்தேகமே.

ஒருவேளை அவர், களமிறங்​கும் பட்​சத்​தில் சஞ்சு சாம்சன் அல்​லது இஷான் கிஷன் நீக்​கப்​படக்​கூடும்.

சஞ்சு சாம்சன் அயர்​லாந்​துக்கு எதி​ரான முதல் போட்​டி​யில் 5 ரன்​களும், 2 ஆட்​டத்​தில் ரன் ஏதும் எடுக்​காமலும் வெளி​யேறி இருந்​தார். இஷான் கிஷன் இரு ஆட்​டங்​களை​யும் சேர்த்து 13 ரன்​கள் எடுத்திருந்​தார்.

அயர்​லாந்து தொடரில் ஸ்ரேயஸ் ஐயர், திலக் வர்​மா, அபிஷேக் சர்மா உள்​ளிட்ட முன்​னணி பேட்​ஸ்​மேன்​கள் அனை​வரிடம் இருந்து பெரிய அளவி​லான மட்டை வீச்சு வெளிப்​பட​வில்​லை.

கடைசி போட்​டி​யில் வேகப்​பந்து வீச்​சுக்கு எதி​ராக திலக் வர்மா தடு​மாறி​னார். அவர், அரை சதம் அடித்த போதி​லும் 46 பந்​துகளை எதிர்​கொண்டு 55 ரன்​களே சேர்த்​தார்.

இதனால் இங்​கிலாந்​துக்கு எதி​ரான தொடரில் இவர்​கள் கவன​முடன் செயல்​படக்​கூடும்.

Related Articles

Latest Articles