நாட்டில் டெங்கு காய்ச்சல் காரணமாக இதுவரையில் 32 பேர் உயிரிழந்துள்ளனர் என்று தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது.
அத்துடன், 2026 ஜனவரி முதல் இதுவரையான காலப்பகுதியில் 55 ஆயிரத்து 406 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஜுன் மாதத்தில் மாத்திரம் 21 ஆயிரத்து 565 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேல் மாகாணத்திலேயே அதிகளவானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.










