மலையக மக்களின் நலனுக்காக ஈராண்டுகளில் காத்திரமான திட்டங்கள் முன்னெடுப்பு

தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஆட்சிக்கு வந்த கடந்த இரண்டு வருட காலப்பகுதியில், மலையக மக்களின் நலனுக்காகவும் அவர்களின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதற்காகவும் பல்வேறு காத்திரமான செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பிரதியமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் தெரிவித்தார்.

இன்றைய தினம் கொழும்பில் உள்ள அமைச்சில் ஊடகங்களின் கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

எதிர்க்கட்சிகள் முன்வைக்கும் குற்றச்சாட்டுகள் அரசியல் நோக்கம் கொண்டவை எனக் குறிப்பிட்ட அவர், அரசாங்கம் தனது செயற்பாடுகளின் ஊடாகவே அவற்றுக்கான பதில்களை வழங்கி வருவதாகவும் சுட்டிக்காட்டினார்.

மலையக மக்களின் காணி உரிமை மற்றும் வீட்டுத் திட்டம் தொடர்பில் கருத்துத் தெரிவித்த பிரதியமைச்சர், அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வெறும் வீடுகள் மட்டும் வழங்கப்படாமல், முகவரி மற்றும் உரித்துடன் கூடிய அனைத்து உட்கட்டமைப்பு வசதிகளும் பூர்த்தி செய்யப்பட்ட தரமான வீடுகள் கையளிக்கப்பட்டிருப்பதாகக் குறிப்பிட்டார்.

அத்துடன், எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படும் வீட்டுத் திட்டங்களுடன் இணைத்து, மலையக மக்களுக்குக் குறைந்தபட்சம் 10 பேர்ச்சஸ் காணி உரிமையும், அதற்கான உறுதியும் உறுதிப்படுத்தப்பட்டு வழங்கப்படும் எனவும் அவர் உறுதியளித்தார்.

மேலும், தோட்டத் தொழிலாளர்களின் நாள் சம்பளம் உயர்த்தப்பட்டுள்ளதுடன், பாதைகள், குடிநீர் மற்றும் மலசலக்கூட வசதிகள் உள்ளிட்ட பல்வேறு உட்கட்டமைப்பு வசதிகள் பல பகுதிகளுக்கும் செய்து கொடுக்கப்பட்டுள்ளன.

மலையகப் பாடசாலைகளின் வளர்ச்சிக்காக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, புதிய கட்டடங்கள் கட்டப்பட்டு தற்பொழுது மாணவர்களின் பயன்பாட்டுக்காக விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

கடந்த கால பொருளாதார நெருக்கடிகள் மற்றும் வெளிநாடுகளில் கிடைக்கும் கவர்ச்சிகரமான சம்பளம் காரணமாகவே இளைஞர்கள் வெளிநாடு செல்வது அதிகரித்துள்ளதாகவும், இதற்கு தீர்வாக எதிர்காலத்தில் இவர்களுக்குத் தொழில் பயிற்சி மற்றும் கடன் திட்டங்களை வழங்கி, உள்நாட்டில் சுயதொழில் வாய்ப்புகளை உருவாக்குவதற்கான வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

பல ஆண்டுகளாக மூடப்பட்டுக் கிடந்த ரம்பொடை கலாச்சார மண்டபம், உரிய முறையில் ஆராய்ந்து நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, தற்பொழுது மீண்டும் இயங்குவதற்காகப் புனரமைக்கப்பட்டு வருவதோடு, மிக விரைவில் புதிய பொலிவுடன் மக்கள் சேவைக்குக் கிடைக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், அரச நிறுவனங்கள் ஒருபோதும் அரசியல் நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்படாது, மக்களின் சேவைக்காக மட்டுமே பயன்படுத்தப்படும் என பிரதியமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் வலியுறுத்தினார்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles