ஈரான்மீது உடனடி தாக்குதல்: நெதன்யாகுவின் கோரிக்கையை ஏற்பாரா ட்ரம்ப்?

அமெரிக்காவின் இடைக்காலத் தேர்தல் நிறைவடைந்த பின்னர், ஈரான்மீது உடனடியாகத் தாக்குதல் நடத்த வேண்டும் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பிடம் வலியுறுத்தி வருவதாக அந்நாட்டு ஊடகமான அக்ஸியோஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

எனினும், தற்போதைக்கு ஈரானுடனான பேச்சுவார்த்தைகளுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்பதே ட்ரம்ப்பின் நிலைப்பாடாக உள்ளதாக அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய வட்டாரங்களை மேற்கோள்காட்டி அந்தச் செய்தி தெரிவிக்கிறது.

ஈரானுடனான பேச்சுவார்த்தைகளின் நிலைமை மற்றும் மீண்டும் இராணுவ நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கான காலம் குறித்து இரு தலைவர்களும் சனிக்கிழமை தொலைபேசியில் வெளிப்படையாகக் கலந்துரையாடியுள்ளனர்.

இந்த உரையாடலை இஸ்ரேலியத் தரப்பு கடுமையான பேச்சுவார்த்தை எனவும், அமெரிக்கத் தரப்பு நேரடியான கலந்துரையாடல் எனவும் சுட்டிக்காட்டியுள்ளது.

இதற்கிடையில், ஈரானுடன் மீண்டும் பேச்சுவார்த்தைகளை ஆரம்பிப்பதற்கான இராஜதந்திர முயற்சிகளில் ட்ரம்ப் ஈடுபட்டுள்ளதுடன், நவம்பர் 3ஆம் திகதி தேர்தலுக்குப் பின்னர் பெரிய அளவிலான இராணுவ நடவடிக்கைகளை மீண்டும் ஆரம்பிப்பதற்கான சாத்தியக்கூறுகளையும் அமெரிக்கா ஆராய்ந்து வருவதாகக் கூறப்படுகிறது.

அமெரிக்க வெளிவிவகாரச் செயலாளர் மார்கோ ரூபியோ, ஈரான் மீது மேலதிகத் தாக்குதல்களை நடத்துவது தொடர்பில் ட்ரம்ப் இன்னும் தீர்மானிக்கவில்லை என்றும், இராஜதந்திரத் தீர்வையே அவர் விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles