” ஜே.வி.பி. மட்டுமே நேரடியாக சொன்னது” – மொட்டு கட்சி செயலர்

சர்வக்கட்சி அரசாங்கம் தொடர்பான கலந்துரையாடல்களில் சில கட்சிகள் நேர்மையாக நடந்து கொள்ளவில்லை என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் செயலாளர் சட்டத்தரணி சாகர காரியவசம் எம்.பி தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும கூறியவை வருமாறு,

” ஒரு கட்சியாக, நாங்கள் ஜனாதிபதியைச் சந்தித்து சர்வகட்சி அரசாங்கத்தை அமைப்பதற்கு ஆதரவளிப்பதாக உறுதியளித்துள்ளோம். இந்தப் பேச்சுகளுக்கு சில கட்சிகள் நிறைவேற்ற முடியாத பல்வேறு கோரிக்கைகளை முன்வைக்க முயல்கின்றன. வெளிப்படையாக, நேரடியாகச் சொல்லாமல் தவிர்க்கப் பார்க்கிறார்கள். அவர்களில் எவருக்கும் கலந்துரையாடல்களில் இணைந்து கொள்வதில் உண்மையான எண்ணம் இருப்பதாக நான் நினைக்கவில்லை.

ஜே.வி.பி மட்டும் சர்வகட்சி அரசாங்கத்தில் சேர விரும்பவில்லையென நேரடியாகக் கூறியுள்ளது. ஆனால் மற்றைய கட்சிகள் தாங்கள் இணைவதற்கு தயாராக இருப்பதாகக் கூறி, பின்னர் பல்வேறு நிபந்தனைகளை முன்வைக்கின்றன. இதுதான் முக்கிய பிரச்சினை என்று நினைக்கிறேன்.” – என்றார்.

Related Articles

Latest Articles