டயஸ்போராக்களின் தேவைக்காகவே படையினர் குறி வைப்பு: விமல் குற்றச்சாட்டு!

புலிகளின் ஆயுத கப்பல்களை அழித்து போரை முடிப்பதற்கு கடற்படையினர் முக்கிய பங்களிப்பு வழங்கினர். எனவேதான் புலிகள் மற்றும் டயஸ்போராக்களின் தேவைக்காக படையினர் பழிவாங்கப்பட்டுவருகின்றனர் என்று தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்தார்.

தனியார் தொலைக்காட்சியொன்றுக்கு வழங்கிய நேர்காணலின்போது அவர் மேலும் கூறியவை வருமாறு,

” முன்னாள் கடற்படை தளபதி கைது செய்யப்பட்டுள்ளார். படையில் இருந்த ஒருவருக்கு சலுகைகளை வழங்குவதாக உறுதியளித்து, அவரிடமிருந்து முறைப்பாட்டை பெற்றுகூட படைத்தளபதிகள் கைது செய்யப்படலாம்.

முன்னாள் கடற்படை தளபதி புலனாய்வு அதிகாரியாக இருந்த காலத்தில் இடம்பெற்ற சம்பவமொன்று தொடர்பிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவ்வாறு படையினர் மற்றும் புலனாய்வாளர்கள் பழிவாங்கல்களுக்கு உட்படுத்தப்பட்டுவருகின்றனர்.

போர்காலத்தில் கடற்படையினர் முக்கிய பங்களிப்பை வழங்கினர். புலிகளின் ஆயுத கப்பல்கள் அழிக்கப்பட்டன. போரை முடிப்பதற்கு இந்நடவடிக்கை முக்கிய பங்கு எனலாம். எனவேதான் படையினர் தற்போது துரத்தப்பட்டு பழிவாங்கப்பட்டுவருகின்றனர். இது புலிகளின் தேவைப்பாடாகும். டயஸ்போராக்களின் தேவைப்பாடாகும்.” – என்றார் விமல்வீரவன்ச.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles