டலஸ் அணியை வளைத்துபோட மொட்டு கட்சி வியூகம்!

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியிலிருந்து சுயாதீனமாக செயற்படும் உறுப்பினர்கள் சிலரை மீண்டும் கட்சியில் இணைப்பதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.

பஸில் ராஜபக்சவின் வழிகாட்டலுடன் இதற்கான நகர்வுகள் இடம்பெறுகின்றன.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் இருந்து சுயேச்சையாக செயற்படும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவுடன் அடுத்த வாரமும் பல கலந்துரையாடல்கள் இடம்பெறவுள்ளதாக அக்கட்சியின் அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மேலும் எதிர்காலத்தில் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படும் கட்டளைச் சட்டங்களை நிறைவேற்றும் அதிகாரத்தில் மூன்றில் இரண்டு பங்கு கட்சிக்கு தொடர்ந்தும் இருக்க வேண்டும் என்பதற்காகவே இந்த நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அறியமுடிகிறது.

இந்த விடயம் தொடர்பில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி சாகர காரியவசம் வினவிய போது, ​​சதிகாரர்களிடம் சிக்கியுள்ள தமது கட்சியின் குழுவொன்று எதிர்காலத்தில் நிச்சயமாக பொதுஜன பெரமுனவில் இணையும் என தெரிவித்தார்.

எதிர்வரும் தேர்தலில் கட்சியின் பலத்தை காட்டுவதற்கு ஏற்கனவே பல வியூகங்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளதாகவும், அத்தேர்தலில் தமது கட்சி பாராளுமன்றத்தில் பெரும்பான்மை ஆசனங்களை நிச்சயமாக பெற்றுக்கொள்ளும் எனவும் பொதுஜன பெரமுனவின் செயலாளர் தெரிவித்துள்ளார்.

Related Articles

Latest Articles