டிக்டொக் செயலி தடை

டிக்டொக் செயலி மற்றும் PUBG  மொபைள் கேம் ஆகியன ஆப்கானிஸ்தானில் தடை செய்யப்பட்டுள்ளன.

ஆப்கானிஸ்தானின் இளைஞர்களை தவறாக வழிநடாத்துவதாக வலியுறுத்தியே குறித்த செயலி மற்றும் மொபைள் கேம் ஆகியவற்றுக்கு தலிபான்கள் தடைவிதித்துள்ளனர்.

ஆப்கானிஸ்தான் ஆட்சியை கைப்பற்றிய தலிபான்கள் ஏற்கனவே பாடல்கள், திரப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கும் தடைவிதித்துள்ளனர்.

இந்த நிலையிலே, டிக்டொக் செயலி மற்றும் PUBG  மொபைள் கேம் ஆகியவற்றை தடை செய்யுமாறு தொலைத்தொடர்பு அமைச்சுக்கு  தலிபான்கள் உத்தரவிட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

அத்துடன், செய்தி மற்றும் மத நிகழ்வுகள் தவிர்ந்த ஏனைய நிகழ்ச்சிகளை ஒளிபரப்புவதனை நிறுத்துமாறும் உத்தரவிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தகது.

Related Articles

Latest Articles