பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு 2022 ஆம் ஆண்டு ஜனவரி 2ஆம் திகதி டுபாய் செல்லவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஐக்கிய அரபு அமீரகத்தில் (UAE) நடைபெற்று வரும் “எக்ஸ்போ 2020” கண்காட்சியில் பிரதமர் கலந்து கொள்ளவுள்ளதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
2022ஆம் ஆண்டு ஜனவரி 3ஆம் திகதி நடைபெறவுள்ள இந்நிகழ்வில் பிரதம அதிதியாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, குறித்த விஜயத்தின் போது ஐக்கிய அரபு இராச்சியத்தின் அரச தலைவருடன் கலந்துரையாடல் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், விஜயத்தின் போது ஏனைய அதிகாரிகளுடனும் கலந்துரையாடல் இடம்பெறும் எனவும் பிரதமர் அலுவலகம் மேலும் தெரிவித்துள்ளது.










