ட்ரம்பின் சிறப்பு தூதுவர் புடினுடன் அவசர சந்திப்பு!

ரஷ்​யா – உக்​ரைன் அமைதி ஒப்​பந்​தம் ஏற்​படுத்​து​வதற்கு அமெரிக்கா விதித்த காலக்​கெடு நாளையுடம் முடிவடைய உள்​ளது. இந்த நிலை​யில், அமெரிக்க ஜனாதிபதியின் சிறப்பு தூதர் ஸ்டீவ் விட்​காப் ரஷ்ய தலைநகர் மாஸ்​கோ​வில் நேற்று ரஷ்ய ஜனாதிபதி புடினை சந்​தித்து பேச்​சு​வார்தை நடத்​தி​னார்.

உக்​ரைனில் ரஷ்​யா​வின் தாக்​குதலை முடிவுக்கு கொண்டு வரவேண்​டும் என்​ப​தில் அமெரிக்க ஜனாதபதி ட்ரம்ப் மிக தீவிரமாக உள்​ளார்.

இதற்​காக உக்​ரைனுடன் ஒரு அமைதி ஒப்​பந்​தத்தை மேற்​கொண்டு போரை நிறுத்த வேண்டி ரஷ்​யா​வுக்கு 50 நாட்​கள் வரை காலக்​கெடு விதிப்​ப​தாக ட்ரம்ப் தெரி​வித்​தார். இல்​லை​யெனில் கடுமை​யான பொருளா​தார அபராதங்களை ரஷ்யா எதிர்​கொள்ள நேரிடும் என்​றும் அவர் எச்​சரிக்கை விடுத்​தார்.

ட்ரம்ப் விதித்த காலக்​கெடு நாளை​யுடன் முடிவடைய உள்ள நிலை​யில் நேற்று அவரது சிறப்பு தூதர் ஸ்டீவ் விட்​காப் அவசர அவசரமாக ரஷ்​யா​வுக்கு சென்று புடினை சந்​தித்​துப் பேச்​சு​வார்த்தை நடத்​தி​யுள்​ள​தாக ரஷ்ய அதிபரின் கிரெம்ளின் மாளிகை தெரி​வித்​துள்​ளது.

எனினும், இந்த பேச்​சு​வார்த்​தை​யில் என்​னென்ன முக்​கிய அம்​சங்​கள் இடம்​பெற்றன என்​பது குறித்த விவரங்​களை ரஷ்ய ஜனாதிபதி மாளிகை உடனடி​யாக வெளி​யிட​வில்​லை.

Related Articles

Latest Articles