தங்கத்தின் விலையில் வீழ்ச்சி

இலங்கையில் தங்கத்தின் விலை மீண்டும் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அதன்படி, இன்று (02) காலை கொழும்பு செட்டியார் தெரு தங்க சந்தையில் “22 கரட்” ஒரு பவுன் தங்கத்தின் விலை 147,000 ரூபாவாக குறைந்துள்ளது.

கடந்த வௌ்ளிக்கிழமை 152,600 ரூபாவாக காணப்பட்ட “22 கரட்” ஒரு பவுன் தங்கத்தின் விலை 5,600 ரூபாவால் இவ்வாறு குறைந்துள்ளது.

இதனிடையே கடந்த வௌ்ளிக்கிழமை 165,000 ரூபாவாக இருந்த “24 கரட்” ஒரு பவுன் தங்கம், இன்றைய தினம் 159,000 ரூபாவாக குறைந்துள்ளதாக கொழும்பு செட்டியார் தெரு தங்க சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Related Articles

Latest Articles