” கொட்டகலை பொது சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட பகுதியில் கடந்த காலங்களில் 843 பேர் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டனர். அதில் 46 மரணங்கள் இடம்பெற்றுள்ளன. குறித்த மரணங்கள்களில் அதிகமானவை 60 வயதிற்கு மேற்பட்டவர்களே. இதில் குறிப்பாக எந்த வித தடுப்பூசியும் பெற்றுக்கொள்ளாதவர்களே சுமார் 90 சதவீதம் இறந்துள்ளனர்.”
இவ்வாறு கொட்டகலை பொது சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் கே.சுதர்சன் தெரிவித்தார்.
” கொட்டகலை சுகாதார பிரிவில் இன்றைய தினம் சுமார் 1, 600 பேருக்கு முதலாம் மற்றும் இரண்டாம் தடுப்பூசிகள் பெற்றுக்கொடுக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. எனவே, 30 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் தடுப்பூசியை பெற்றுக்கொள்ள வேண்டும் என கேட்டுக்கொள்கின்றேன்.
எதிர்வரும் நாட்களில் 20 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் தடுப்பூசி வழங்கப்படும். அப்போது அவ்வயது பிரிவினர் கட்டாயம் தடுப்பூசியை பெற்றுக்கொள்ள வேண்டும். தடுப்பூசிதான் தற்போது உயிர் பாதுகாப்பு கவசம். அதனை கட்டாயம் பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றேன். ” -என்றார்.
கே. சுந்தரலிங்கம், ஹட்டன்