எத்தனை தடைகள் வந்தாலும் அவற்றைக் கடந்து மக்கள் பணிக்காக முன்நோக்கி செல்வோம் என கொட்டகலை பிரதேச சபைத் தலைவர் ராஜமணி பிரசாத் தெரிவித்துள்ளார்.
கடந்த 31ஆம் திகதி வரை சுய தனிமைப்படுத்தலில் இருந்த பின்னர் மீண்டும் மக்களைச் சந்தித்தபோது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்களில் உள்ள வருமானம் குறைந்த குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொருட்களை வழங்கிய பின்னர் அவர் இதனைத் தெரிவித்தார்.
இதுகுறித்து மேலும் கருத்து தெரிவித்த அவர்,
”முழு உலகமும் கொரோனா நெருக்கடியினால் தடுமாறியுள்ள நிலையில், அதனை வாழப் பழகிக் கொள்ள வேண்டும் என்று உலக சுகாதார ஸ்தாபனம் வலியுறுத்தி வருகிறது. எனவே, கைககளைக் கழுவிக்கொண்டு, முகக் கவசம் அணிந்து, சமூக இடைவெளியைப் பேணி எமது பணிகளை முன்னெடுக்க வேண்டும். இவ்வாறு முன்னெடுத்து வந்த நிலையில், நாம் கலந்துகொண்ட கூட்டத்தில் ஒருவருக்கு கொவிட் தொற்று உறுதிசெய்யப்பட்டது. எனினும், சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றியதால் அந்த கொவிட்டி தொற்றில் இருந்து தப்பித்துக் கொண்டோம். இருந்தாலும் பாதுகாப்பிற்காக சுய தனிமைப்படுத்திக் கொண்டோம். தற்போது பாதுகாப்பாக மக்கள் பணியை மீண்டும் ஆரம்பித்துள்ளோம். அதனால் பொதுமக்களும் சுகாதார பாதுகாப்பு வழிமுறைகளுடன் வாழ்க்கையை முன்னெடுத்துச் செல்ல வேண்டும்.” என்று தெரிவித்துள்ளார்.
- சுசி