‘தடைக்கு மத்தியிலும் பொகவந்தலாவையில் திருமணம்’

பொகவந்தலாவை பகுதியில் நடைபெற்றுக்கொண்டிருந்த திருமண நிகழ்வொன்றை பொலிஸாரும், பொது சுகாதார அதிகாரிகளும் இணைந்து தடுத்து நிறுத்தியுள்ளனர்.

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவிவருவதால் வீடுகளிலோ அல்லது மண்டபங்களிலோ திருமண வைபகங்களை நடத்துவதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. பதிவுத் திருமணத்துக்கு மட்டுமே கடும் கட்டுப்பாடுகளுடன் அனுமதி உள்ளது.

இந்நிலையில் பலரின் பங்குபற்றலுடன் நடைபெற்ற திருமணமொன்றே இவ்வாறு தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.

Related Articles

Latest Articles