நமுனுகுலை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பிபிலேகம கடுவலவத்தை பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் வாள் மற்றும் கஞ்சா போதைப்பொருள் மறைத்து வைத்திருப்பதாக பதுளை பிராந்திய குற்றத்தடுப்பு பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலை அடுத்து சந்தேகத்துக்குரிய வீட்டினை சோதனைக்குட்படுத்திய போது வீடொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த வாள்கள் 3 மற்றும் கஞ்சா போதைப்பொருள் பதுளை பிராந்திய குற்றத்தடுப்பு பிரிவினரால் மீட்கப்பட்டுள்ளது.
குறித்த பிரதேசத்தில் திருமணமான நபர் ஒருவரின் நண்பர்களான கலங்கம தலவத்கொட பிரதேசத்தைச் சேர்ந்த 3 நபர்களிடம் இருந்து 2150 மி.கி , 2000. மி.கி, 2900 மி.கி கஞ்சா போதைப்பொருள் தனித்தனியே மீட்கப்பட்டுள்ளதோடு செல்ல கதிர்காமத்தைச் சேர்ந்த நபரிடம் இருந்து 3 தடைசெய்யப்பட்ட வாள்கள் கைப்பற்றப்ப்பட்டுள்ளன.
குறித்த 46, 38 ,35 மற்றும் 28 வயதுடைய 4சந்தேக நபர்களையும் நேற்று மாலை கைது செய்து நமுனுகலை பொலிஸ் நிலையத்தில் பதுளை குற்றத்தடுப்பு பிரிவினர் ஒப்படைத்துள்ளனர்.
பதுளை பிராந்திய பொலிஸ் பிரிவின் பொறுப்பதிகாரி சுஜித் வெதமுல்லவின் ஆலோசனையின் பேரில் நமுனுகுலை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
குறித்த சந்தேக நபர்கள் நால்வரையும் இன்றைய தினம் பசறை நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்துவதற்கான நடவடிக்கைகளை நமுனுகுலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
ராமு தனராஜா
