தந்தை செலுத்திய ஆட்டோவில் சிக்குண்ட ஒன்றரை வயது நிரம்பிய ஆண்குழந்தையொன்று பலியான சம்பவம் பிபிலைப் பகுதியில் இன்று 22-04-2021ல் இடம்பெற்றுள்ளது.
பிபிலைப் பகுதியின் நன்னபுராவ என்ற இடத்தைச் சேர்ந்த டி.எம். சேனுல சேகான் என்ற ஒன்றரை வயது நிரம்பிய ஆண் குழந்தையே, பலியானதாகும்.
தகப்பன் செலுத்திய ஆட்டோ சில்லில், மேற்படி குழந்தை சிக்குண்டதையடுத்து, உடனடியாக அக்குழந்தை பிபிலை அரசினர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. குழந்தையைப் பரிசோதித்த டாக்டர்கள், அக்குழந்தை ஏற்கனவே, இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.
இது குறித்து விசாரணைகளை மேற்கொண்ட மெதகமை பொலிசார், ஆட்டோவை செலுத்திய பலியான குழந்தையின் தகப்பனைக் கைது செய்துள்ளனர்.
எம். செல்வராஜா, பதுளை