ஹட்டன், ஶ்ரீபாத கல்வியற் கல்லூரி,தற்காலிக தனிமைப்படுத்தல் முகாமாக இயங்கவுள்ளது. இதற்காக மேற்படி கல்லூரியை இராணுவம் இன்று (11) பொறுப்பேற்றதாக கல்லூரியின் பீடாதிபதி கே. துரைராஜசிங்கம் தெரிவித்தார்.
அத்துடன், இங்கு தங்கியிருந்த கல்விபயின்ற மாணவர்களுக்கு மறுஅறிவித்தல் விடுக்கப்படும்வரை விடுறை வழங்கப்பட்டுள்ளது. அவர்கள் பாதுகாப்பான முறையில் வீடுகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர். இதற்காக இராணுவம் 10 பஸ்களை ஈடுபடுத்தியது.
மினுவாங்கொட ஆடைத்தொழிற்சாலை கொரோனா கொத்தணி பரவலையடுத்து நாட்டில் ஆங்காங்கே கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுவருகின்றனர். அவர்களுடன் பழகியவர்களை தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுவருகின்றனர்.
இந்நிலையிலேயே முன்பாதுகாப்பு ஏற்பாடாக ஶ்ரீதாப கல்வியற் கல்லூரியும் கொரோனா தனிமைப்படுத்தல் நிலையமாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
க.கிசாந்தன்