தபால் ஊழியர்கள் இன்று(12) நள்ளிரவு முதல் சுகவீன விடுமுறை தொழிற்சங்கப் போராட்டத்தை முன்னெடுக்க தீர்மானித்துள்ளனர்.
ஊழியர்களை சேவையில் இணைத்துக்கொள்ளாமைக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த சுகவீன விடுமுறை தொழிற்சங்கப் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
ஊழியர் பற்றாக்குறை காரணமாக தபால் திணைக்களத்தின் செயற்பாடுகள் முற்றாக தடைப்பட்டுள்ளதாக ஒன்றிணைந்த தபால் சேவை தொழிற்சங்க ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் சிந்தக்க பண்டார தெரிவித்தார்.
இதேவேளை, பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து வீதி அபிவிருத்தி அதிகாரசபை பொறியியலாளர்கள் சங்கத்தினால் ஆரம்பிக்கப்பட்டுள்ள பணிப்பகிஷ்கரிப்பு இன்று ஆறாவது நாளாகவும் முன்னெடுக்கப்படுகிறது.
ஊழியர்களை சேவையில் இணைத்துக்கொள்ளாமைக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாக வீதி அபிவிருத்தி அதிகாரசபை பொறியியலாளர்கள் சங்கத்தின் தலைவர் ஹேமச்சந்திர குணசிங்க கூறினார்.
இதேவேளை, பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களின் பணிப்பகிஷ்கரிப்பு இன்று 41 ஆவது நாளாகவும் முன்னெடுக்கப்படுகிறது.
15 வீத சம்பளம் குறைக்கப்பட்டமை உள்ளிட்ட பல பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்குமாறு கோரி கல்விசாரா ஊழியர்கள் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுப்பட்டுள்ளனர்.
பணிப்பகிஷ்கரிப்பின் காரணமாக நாட்டிலுள்ள 17 பல்கலைக்கழகங்களின் கல்விச் செயற்பாடுகள் ஸ்தம்பிதமடைந்துள்ளன.