தப்பியோடிவிட்டாரா பஸில்? ராஜபக்ச குடும்பத்திலிருந்து வெளியான பதில்!

” பிரச்சினைகளுக்கு அஞ்சி, ராஜபக்சக்கள் ஒருபோதும் தப்பியோடமாட்டார்கள்.” – என்று இராஜாங்க அமைச்சர் சசீந்திர ராஜபக்ச தெரிவித்தார்.

பொருளாதார நெருக்கடியை சமாளிக்க முடியாமல் பஸில் ராஜபக்ச நாட்டைவிட்டுச் சென்றுள்ளாரென எதிரணிகளால் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பில் எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

” பஸில் ராஜபக்சவுக்கு எதிராக இதற்கு முன்னரும் இப்படியான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. குறைகூறுவதற்கு ஒன்றுமில்லாததால்தான் எதிரணிகள் பஸில் விவகாரத்தை கையிலெடுத்துள்ளன. இது வங்குரோத்து அரசியலின் வெளிப்பாடு.

பஸில் ராஜபக்ச சிறப்பாக செயற்படக்கூடியவர். அவரும் மனிதனர். தனிப்பட்ட தேவைகள் இருக்கலாம். அதற்காக சென்றிருக்கலாம். மீண்டும் வருவார். தப்பியோடுபவர்கள் ராஜபக்சக்கள் அல்லர்.” – எனவும் சசீந்திர ராஜபக்ச குறிப்பிட்டார்.

Related Articles

Latest Articles